|
Spanish
- Chinese
-
Russian
-
Malay
-
Tamil
-
German
-
French
-
Arabic
-
Korean
-
Malayalam
-
Hindi Telugu -
Gujarati -
Portuguese
தேவன் உங்களை நேசிக்கிறார் மேலும் அவரைத்
தனிப்பட்ட முறையில் அறியும்படி உங்களைப் படைத்திருக்கிறார்.
யோவான் 3:16 'தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன்
எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத்
தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 17:3 'ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய
இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்."
மனிதன் பாவமுள்ளவன் மற்றும் தேவனிடமிருந்து
பிரிக்கப்பட்டிருக்கிறான் எனவே அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்து
கொள்ளவும் அவருடைய அன்பை அனுபவிக்க முடியாதவனாகவும் உள்ளான்.
ரோமர் 3:23 'எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்."
ரோமர் 6:23 'பாவத்தின் சம்பளம் மரணம்" (தேவனிடமிருந்து ஆத்மீகப்
பிரிவு)
மனிதனின் பாவத்திற்கு தேவன் அருளும் ஒரே பரிகாரம் இயேசு
கிறிஸ்துவே. அவர் மூலமாகவே நாம் தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்து
கொள்ளவும் அவருடைய அன்பை அனுபவிக்கவும் முடியும்.
ரோமர் 5:8 'நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக
மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்.
நாம் தனிப்பட்ட முறையில் இயேசுகிறிஸ்துவை ஆண்டவராகவும்
இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பொழுது நாம் தேவனை
தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளவும் அவருடைய அன்பை அனுபவிக்க
முடியும்.
யோவான் 1:12 'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை
ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும்
தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்."
எபேசியர் 2:8-9 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு
இரட்சிக்கப்பட்டூர்கள் இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு
ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.
ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை தனிப்பட்ட
முறையில் அறிய விரும்புகிறேன். என்னுடைய பாவங்களுக்காக சிலுவையில்
மரித்ததற்காக நன்றி. என்னுடைய வாழ்வின் கதவை நான் திறந்து உம்மை என்
வாழ்வில் இரட்சகராக, ஆண்டவராக ஏற்றுக் கொள்கிறேன். என் வாழ்வை நீர்
ஆண்டு கொள்ளும். என் பாவங்களை மன்னிக்கிறதற்காகவும் நித்திய ஜீவனை
தருகிறதற்காகவும் உமக்கு நன்றி. நான் எப்படிப்பட்டவனாக இருக்க நீர்
விரும்புகிறீரோ அப்படி என்னை மாற்றும்.
A Prayer of Salvation:
Heavenly Father, I recognize and admit that
I am a sinner. I repent of my sins and asking forgiveness. I
confess with my mouth and believe in my heart that Jesus is the
Son of God and He died for my sins. I believe that Jesus lived,
died, buried and was raised from the dead for my salvation.
Today I receive Jesus as my Savior into my heart. And I Thank
You for saving me this day. In Jesus' name I pray. Amen!
All content copyright © 2001
- 2010 Internationalchurch.cc.
|